டிரெண்டிங்

மின்மீட்டர் கொள்முதல் விவகாரம்: மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம்

மின்மீட்டர் கொள்முதல் விவகாரம்: மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம்

webteam

மின்மீட்டர் கொள்முதலுக்கான ஒப்பந்தப் புள்ளி இறுதி‌ செய்யப்படவில்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம் மேட்டூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மின்மீட்டர் கொள்முதலில் எந்த முறைகேடும் இல்லை என்றும் கொள்முதலுக்கான ஒப்பந்தப் புள்ளி இறுதி‌ செய்யப்படவில்லை என்றும் கூறினார். அரசு மீது குறை கூறவேண்டும் என்ற நோக்கிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும் தங்கமணி தெரிவித்தார்.

தி.மு.க ஆட்சியில் மின் மீட்டர், கொள்முதல் செய்யப்பட்ட விலையை விட இப்போது குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மின்மீட்டர் கொள்முதலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.