இக்கட்டான சூழலில் முன்பின் தெரியாதவர்கள் செய்யும் உதவி வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாததாக அமையும். அப்படியான முதுகெலும்பை சிலிர்க்க வைக்கும் நெகிழவைக்கும், அதிர்ச்சியான சம்பவம் பற்றிதான் பார்க்க போகிறோம்.
அதன்படி, ஐந்தாவது மாடியின் ஜன்னலில் இருந்து கீழே விழுந்த சிறுமியை நடைபாதையில் இருந்தவர் தக்க சமயத்தில் காப்பாற்றிய நிகழ்வு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள டோங்சியாங்கில் நடந்திருக்கிறது.
ஷென் டோங் என்ற நபர் தனது காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு காத்திருந்தபோது குழந்தை ஒன்று அருகே இருந்த கட்டடத்தின் மாடியில் இருந்து கீழே விழுவதை கண்டிருக்கிறார். இதனை உணர்ந்த டோங் உடனடியாக கீழே விழும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிடாத வகையில் பிடித்திருக்கிறார்.
இதுதொடர்பான வீடியோதான் பல்லாயிரக்கணக்கானோரை ஈர்த்திருக்கிறது. மேலும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷென் டோங் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த சீன அரசு அதிகாரியான லிஜியன் ஜாவோ “ஹீரோக்கள் நம்முடனேயேதான் இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தியின்படி, விபத்தின் போது பெண் குழந்தையின் கால்கள் மற்றும் நுரையீரலில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றனவாம். அதனால் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிறுமியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், Qianjiang என்ற செய்திக்கு ஷென் டோங் அளித்திருந்த பேட்டியில், “மேலே இருந்தது குழந்தைதான் என அந்த சிறுமி தவழும் வரையில் அறிந்திருக்கவில்லை.. உண்மையை சொல்லவேண்டுமென்றால் எனக்கு நடந்ததென்றே நினைவில் இல்லை” எனக் கூறியிருக்கிறார்.
“எனக்கு ஒரு உள்ளுணர்வு வந்தது. அதனால்தான் சரியான நேரத்தில் குழந்தையை பிடித்தேன். இல்லையே பயங்கரமான சம்பவமே நடந்திருக்கும். என் கைகள் வலிக்கிறதா இல்லையா என்றுக்கூட நினைவில் இல்லை” என ஷென் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே உண்மையான ஹீரோக்கள் படத்தில் மட்டுமல்ல இந்த உலகத்திலேயேதான் இருக்கிறார்கள் என்றும்,