ஒருவர் விசில் அடிப்பதைக் கேட்டு 30 மேற்பட்ட யானைகள் அவரை பின் தொடரும் வீடியோ ஒன்று பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.
மனிதர்களை ஆறு அறிவு கொண்டர்கள் என்கிறார்கள். மிருகங்களை 5 அறிவு படைத்தவை என்கிறார்கள். ஆனால் பல நேரங்களில் 6 அறிவைவிட இந்த 5 அறிவு கொண்ட விலங்குகள் புத்திசாலிதனமாக நடந்து கொள்கின்றன. அப்படி ஒரு நிகழ்வு உலக அளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ‘Sheldrick Wildlife Trust’ என்ற விலங்குகள் நல அமைப்பு அதனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பல நாடுகளை தாண்டி நல்ல பெயரை சம்பாத்தித்துள்ளது.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். வீடியோவில், ஆதரவற்று இருக்கும் அனாதையான யானைகள் அனைத்தையும் சின்ன குட்டியாக இருக்கும் போது ஒருந்தே Sheldrick Wildlife Trust அமைப்பைச் சார்ந்த பெஞ்சமின் என்பவர் எடுத்து வளர்த்ததாக அவர் எழுதியுள்ளார். ஒரு அடர்ந்த வனப்பகுதிக்குள் அவர் யானைகளை விசில் அடித்து அழைக்கிறார். உடனே அத்தனை யானைகளும் அவரது பின்னால் வரிசை மாறாமல் நடக்கின்றன. இப்படி ஒட்டு மொத்தமாக 38 யானைகள் கம்பீரமாக நடைபோடும் அழகை இந்த வீடியோ பதிவு செய்துள்ளது.
இந்தப் பதிவின் குறிப்பில் அனாதை யானைகள் அனைத்தும் “தற்போது பாதுகாக்கப்பட்ட காடுகளின் வாழ்வை நோக்கி திரும்பி வருகின்றன. ஒவ்வொரு அடியிலும் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்துள்ளன” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 75,000 க்கும் மேற்பட்ட பார்வைகளை சென்று சேர்ந்துள்ளது. இந்த இடுகையில் 11,000 க்கும் மேற்பட்டவர்கள் கருத்திட்டு உள்ளனர். 1,300 பேர் ஷேர் செய்துள்ளனர். அதிகாரி நந்தாவின் இந்த இடுகையைப் பொறுத்தவரை, 12,000 க்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1,300 லைக்குகளையும், சுமார் 300 ரீ ட்வீட்களையும் பெற்றுள்ளது.
https://www.facebook.com/watch/?v=265847591188866