தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை கண்டித்து திமுக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி வருகிறது. அதன்படி இன்று நடைப்பெற்ற போராட்டம் ஒன்றில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புதுமணப் தம்பதியினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடுசம்பவத்தின் காரணமாக 13 பேர் உயிரிழந்தனர் . இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து மு.க.ஸ்டாலின் பங்கேற்ற போராட்டத்தில் புதுமணப் தம்பதியினர் கலந்துகொண்டு தூத்துக்குடி துப்பாக்கி சூடுசம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனவரையும் போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தில் முழு அடைப்பு போரட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்த நிலையில் போராட்டத்திற்கு தமிழக மக்கள் ஆதரவை அளித்து வருகிறனர் என்பது குற்ப்பிடத்தக்கது.