5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன்களை எடுத்துள்ளது.
ரோஹித் 34 (18)
கில் 11 (12)
உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் முதலிடம்.
நடந்து வரும் உலகக்கோப்பையில் 27 சிக்ஸர்களை அடித்துள்ளார் ரோஹித்.
2015 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் க்றிஸ் கெயில் 26 சிக்ஸர்களை அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
உலகக்கோப்பை தொடர்களில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடம்.
இதுவரை 50 சிக்ஸர்களை உலகக்கோப்பைத் தொடரில் அடித்துள்ளார். க்றிஸ் கெயில் 49 சிக்ஸர்களை அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.
8.2 ஓவர்களில் 47 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மா அவுட்.
சௌதீ பந்துவீச்சில் கேன் வில்லியம்சனிடன் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
ரோஹித் 47 (26) - 4 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள்
இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களை எடுத்துள்ளது.
கில் 30 (26)
விராட் 4 (5)
12. 2 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 102 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா 102/1 (12.2)
கில் 48 (38)
விராட் 4 (7)
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்குன்150 ரன்களை எடுத்தது.
கில் 74 (57)
விராட் 26 (34)
ஒருநாள் போட்டிகளில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. 13705 ரன்கள் எடுத்து அசத்தல்.
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் 18426 ரன்களுடன் முதலிடத்திலும், 14234 ரன்களுடன் சங்ககரா இரண்டாம் இடத்திலும் உள்ளனர். விராட் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
விராட் கோலி அரைசதம். 59 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தல். 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் தனது 6 ஆவது அரைசதத்தை பதிவு செய்தார் கோலி. 10 போட்டிகள் விளையாடி 2 சதங்கள் 6 அரைசதங்கள் உட்பட 644 ரன்களைக் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது 72 ஆவது அரைசதமாகும்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் கோலி. 264 அரைசதங்களுடன் சச்சின் முதலிடம். 217 அரைசதங்களுடன் ரிக்கி பாண்டிங் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் விராட்டும் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்.
30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவிப்பு.
விராட் 65 (71)
ஸ்ரேயாஸ் 19 (15)
விராட் - ஸ்ரேயாஸ் இணை 50 ரன்கள் பார்ட்னர்ஷிப். 3 ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்த கில் - ஸ்ரேயாஸ் ஜோடி 44 பந்துகளில் 50 ரன்களை அடித்து அசத்தல்
இன்றைய போட்டியில் விராட் கோலி 80 ரன்கள் எடுத்ததன்மூலம் சச்சின் சாதனையையும் முறியடித்தார். உலகக்கோப்பை தொடர் ஒன்றில் சச்சின் அதிகபட்சமாய் 673 ரன்கள் எடுத்திருந்தார். அவர் கடந்த 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்த சாதனையைப் படைத்திருந்தார். அவருடைய இந்தச் சாதனையை விராட் கோலி இன்று தகர்த்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் 80 ரன்கள் எடுத்திருந்தபோது தகர்த்தார். இதன்மூலம் உலகக்கோப்பை தொடர் ஒன்றில் அதிகபட்ச ரன் (674*) குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தைப் பிடித்தார்.
ஒருநாள் போட்டிகளில் 50 சதங்களை விளாசியுள்ளார் கோலி. இதன் மூலம் சச்சினின் சாதனையை முறியடித்தார். 49 சதங்களுடன் சச்சின் இரண்டாவது இடத்திலுள்ளார்.
113 பந்துகளில் 117 ரன்களை எடுத்த நிலையில் விராட் அவுட். சௌதி பதில் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். விராட் 117 (113) 9 பவுண்டரி 4 சிக்ஸர்கள்
உலகக்கோப்பை வரலாற்றில் முதல் வீரராக ஒரு தொடரில் 700+ ரன்கள் குவித்தார் விராட் கோலி!
இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்துள்ளது. 398 என்ற இமாலய இலக்கை நியூசி அணிக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா.
அதிகபட்சமாக,
விராட் 117 (113)
ஸ்ரேயாஸ் 105 (70)
கில் 80(66)*
நியூசிலாந்து அணி 5 ஓவர்களில் 30 ரன்களை எடுத்துள்ளது.
ரச்சின் 8 (15)
கான்வே 13 (14)
6 ஓவரில் தனது முதல் ஓவரை வீசிய முகம்மது ஷமி முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார்.
கான்வே ராகுலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
கான்வே 13(15)
ரச்சின் ரவீந்திரா அவுட்!
ஷமியின் வேகத்தில் ரச்சின் கே.எல். ராகுலிடம் கேட் கொடுத்து வெளியேறினார்.
ரச்சின் 13 (22)
நியூசிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 46 ரன்களை எடுத்துள்ளது.
வில்லியம்சன் 4 (18)
மிட்செல் 1 (5)
20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 124 ரன்களை எடுத்துள்ளது.
மிட்செல் 41 (43)
கேன் வில்லியம்சன் 32 (41)
வில்லியம்சன் மிட்செல் இணை 135 பந்துகளில் 155 ரன்களை எடுத்துள்ளது.
மிட்செல் 85 (77)
வில்லியம்சன் 54 (58)
30 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 199 ரன்களை எடுத்துள்ளது.
மிட்செல் 90 (77)
வில்லியம்சன் 58 (67)
சதம் அடித்தார் மிட்செல்..
85 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தல்..
வில்லியம்சன் அவுட்
முகம்மது ஷமி பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட்..
வில்லியம்சன் 69 (73)
9 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள்
முகம்மது ஷமி 17 உலகக்கோப்பைகளில் விளையாடி 50 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
லேதம் அவுட்..
ஷமி வீசிய பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார் லேதம்
லேதம் 0 (2)
முகம்மது ஷமி 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் 20 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
நியூசிலாந்து அணி 40 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது.
மிட்செல் - 126*
பிலிப்ஸ் - 19*
நியூசிலாந்து அணி 41 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. இந்த ஓவரில் மட்டும் இந்தியா 20 ரன்களை வழங்கியுள்ளது.
மிட்செல் - 127*
பிலிப்ஸ் - 36*
நியூசிலாந்து அணி 42 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. இந்த ஓவரில் மட்டும் இந்தியா 2 ரன்களை மட்டுமே வழங்கியது.
மிட்செல் - 128*
பிலிப்ஸ் - 37*
நியூசிலாந்து அணி 43 ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை இழந்தது. அந்த ஓவரின் பும்ரா வீசிய பந்தைத் தூக்கியடித்த பிலிப்ஸ், ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்தக் கேட்சைப் பிடித்த அதிர்ச்சியில் அப்படியே எல்லைக் கோட்டருகே அமர்ந்தார், ஜடேஜா.
பிலிப்ஸ் 33 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
43 ஓவர் முடிவில் நியூசி. 295/5
மிட்செல் - 131*
சாப்மேன் - 0*
நியூசிலாந்து அணி 44 ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை இழந்தது. அந்த ஓவரின் குல்தீப் வீசிய 5வது பந்தை அடித்த சாப்மேன், அதே ரவீந்திர ஜடேஜாவின் கேட்ச் கொடுத்த ஆட்டமிழந்தார். அவர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
44 ஓவர் முடிவில் நியூசி. 299/6
மிட்செல் - 132*
சாண்டனர் - 1*
நியூசிலாந்து அணி 45 ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை இழந்தது. 46வது ஓவரை வீசிய முகம்மது ஷமியின் 2வது பந்தில் மிட்செல், ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர், 134 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 3 கேட்ச்களைப் பிடித்து ஆட்டத்தின் போக்கையே ரவீந்திர ஜடேஜா மாற்றினார். அதுபோல் முகம்மது ஷமியும் 5 விக்கெட்களை எடுத்து அசத்தியுள்ளார்.
நியூசிலாந்து அணி 47 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்துள்ளது. இந்த ஓவரில் மட்டும் இந்தியா 2 ரன்களை மட்டுமே வழங்கியது.
சாண்ட்னர் - 8*
செளதி - 4*
நியூசிலாந்து அணிக்கு இன்னும் 18 பந்துகளில் 85 ரன்கள் தேவை. கைவசம் 3 விக்கெட்கள் உள்ளன.
நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை இழந்தது. சிராஜ் வீசிய அந்த ஓவரில் கேப்டன் ரோகித்திடம் ஆட்டமிழந்து வெளியேறினார், சாண்ட்னர். அவர் 9 ரன்கள் எடுத்தார்.
48 ஓவர் முடிவில் நியூசி. 320/8
இன்னும் 12 பந்துகளில் 78 ரன்கள் தேவை.
நியூசிலாந்து அணி 49.2 ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை இழந்தது. அந்த வீசிய முகம்மது ஷமி, செளதி விக்கெட்டைக் கைப்பற்றினார். கே.எல்.ராகுல் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார். அவர் 9 ரன்கள் எடுத்தார்.
இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு அரையிறுதியில் இதே நியூசிலாந்திடம் கண்ட தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. இதன்மூலம் 4வது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் இந்திய அணி நுழைந்துள்ளது. ஏற்கெனவே இந்தியா 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பையை வென்றுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய அரையிறுதிப் போட்டியில் முகம்மது ஷமி, 9.5 ஓவர்கள் வீசி 57 ரன்கள் வழங்கி, 7 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.