காதலுக்கு வயதோ, தராதரமோ, இனம், மொழி, நிறம் என ஏதும் தடையில்லை என்பது உலகறிந்ததுதான். அதை மீண்டும் மீண்டும் உலகுக்கு தெரியப்படுத்தும் வகையில் நடக்கும் நிகழ்வுகள் அனைவரையும் அதிசயிக்கச் செய்யும் வகையிலேயே இருக்கும்.
அந்த வகையில், தன்னுடைய வீட்டில் வேலை பார்ப்பதற்காக 18,000 சம்பளத்துக்கு நியமிக்கப்பட்ட ஊழியர் மீது காதல் கொண்டு அவரையே திருமணமும் செய்திருக்கிறார் ஒரு பெண்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் பகுதியைச் சேர்ந்தவர் நாசியா. வீட்டின் உரிமையாளரான நாசியா, தனது வீட்டை பராமரிக்க சூஃபியான் என்ற நபரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்.
இதனையடுத்து வீட்டை பராமரிப்பதோடு, சமைப்பது, நாசியா மீது அக்கறையோடு இருப்பது என சூஃபியான் இருந்து வந்திருக்கிறார். சூஃபியானின் இந்த எளிமையும், அக்கறையும் நாசியாவை ஈர்த்துவிட அவரது தன்னுடைய காதலை சூஃபியானிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்.
இதைக் கேட்ட சூஃபியான் மயங்கியே விழுந்திருக்கிறாராம். அதன் பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு காதலாகவும் நட்பாகவும் பழகி வந்ததோடு, திருமணமும் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூப் சேனலுக்கு நாசியாவும், சூஃபியானும் அளித்த பேட்டிதான் தற்போது அந்நாட்டில் வைரலாகி இவர்களது காதல் கதை பலரையும் கவர்ந்திருக்கிறது.
அந்தப் பேட்டியில், நாசியா சூஃபியாவை பாலிவுட் நடிகர் சல்மான் கானோடு ஒப்பிடுவதாகவும், சூஃபியானும் நாசியாவை கத்ரினா கைஃபாகவே நினைப்பதாக கூறியிருக்கிறார். மேலும், அவர்களின் காதல் பணம் மற்றும் தோற்றத்தை விட ஆழமானதாக இருப்பதும், அது இதயங்களின் இணைப்பாக இருப்பதாகவும் அவர்களது பேட்டியின் மூலம் அறிய முடிகிறது.
இருப்பினும் சமுகத்திலிருந்து நாசியா-சூஃபியா காதலுக்கு வெறுப்பும் எதிர்ப்பு எழுந்தாலும் இருவரும் தங்களுடைய காதலில் உறுதியாக இருந்ததால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இருந்து வருவதாக கூறியிருக்கிறார்கள்.