டிரெண்டிங்

‘75 முதல் 27 வயது வரை’ நான்கு தலைமுறையை கொண்ட கேரள கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்

‘75 முதல் 27 வயது வரை’ நான்கு தலைமுறையை கொண்ட கேரள கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்

Veeramani

கேரள சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணியில் களம் காணும் சிபிஎம் 83 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், சிபிஐ 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்திருக்கிறது.

கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 83 வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது, இடதுசாரி கூட்டணிக்கு தலைமை வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மஞ்சேஸ்வரம் மற்றும் தேவிகுளம் வேட்பாளர்களை முடிவு செய்தவுடன், அதில் ஒன்பது கட்சி ஆதரவுடைய சுயேச்சைகள் உட்பட மொத்தம் 85  வேட்பாளர்கள் களம் காண்பார்கள்.

கேரள சட்டசபையில் உள்ள மொத்த 140 இடங்களிலும் சிபிஎம் 85 இடங்களில் போட்டியிடுகிறது, மீதமுள்ள 55 இடங்களும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. புதன்கிழமை வெளியான பட்டியல் 75 வயதான முதல்வர் பினராயி விஜயன் முதல் 27 வயதான எஸ்.எஃப். உறுப்பினர் சச்சின் தேவ் வரை நான்கு தலைமுறைகளின் கலவையாக உள்ளது.

இந்த பட்டியலில் 40 வயதிற்கு உட்பட்ட 13 வேட்பாளர்கள் உள்ளனர், அதேபோல இப்பட்டியலில் 12 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். பினராயி விஜயன் மீண்டும் தர்மத்திலும், கே.கே.சைலாஜா மட்டனூரிலும் போட்டியிடுகிறார்கள். இந்த முறை 33 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை, இவர்களில் சட்டசபை சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் ஐந்து அமைச்சர்களும் அடக்கம்.

இடது சாரி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டாவது பெரிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது, சிபிஐ மொத்தம் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது