ஹைதர் அலியின் படைகளுக்கு எதிராக போராடி வீரமரணம் அடைந்த தலித் பெண் போன்றவர்களை சித்தராமையா கொண்டாடாதது ஏன் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
கர்நாடகா மாநிலத்தில் மே 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரதுர்காவில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, கர்நாடக காங்கிரஸ் அரசு சுல்தான்களின் பிறந்த நாள் விழாக்களை கொண்டாடுவதன் மூலம் ஓட்டு வங்கி அரசியலை கடைப்பிடித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் ஹைதர் அலியின் படைகளுக்கு எதிராக போராடி வீரமரணம் அடைந்த தலித் பெண் போன்றவர்களை சித்தராமையா கொண்டாடாதது ஏன் என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். இதன் மூலம் மண்ணின் மைந்தர்களை காங்கிரஸ் அரசு அவமதித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.