நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்ததை அடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நேற்று கர்நாடக சட்டசபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், குமாரசாமி அரசு தோல்வியைத் தழுவியது. உடனடியாக குமாரசாமி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கர்நாடகாவில் மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக எடியூரப்பா ஒருமனதாக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இன்று மதியம் நடைபெற்றது. இதில், சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பையில் இருந்து கர்நாடகா வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.