திமுகவின் நெருக்கடி காரணமாக தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் கராத்தே தியாகராஜன் பங்கேற்றார். அப்போது மக்களவைத் தேர்தலின்போது, தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் திமுகவிற்காக ஓட்டுப்போடவில்லை என்றும், ராகுல் பிரதமராக வேண்டும் என்பதற்காகவே வாக்களித்தனர் என்றும் கூறினார்.
சத்தியமூர்த்தி பவனில் 4 பேர் அமர்ந்துகொண்டு நடத்துவது கட்சியா என்று கேள்வி எழுப்பிய கராத்தே தியாகராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் இருந்து கே.எஸ்.அழகிரி இன்னும் சில நாட்களில் மாற்றப்படலாம் என்று பேசினார். அடுத்த தலைவராக தான் கூட வரலாம் என்றும் அவர் கூறினார்.