டிரெண்டிங்

'நீட் எழுத மாணவர்களை அலைக்கழிப்பது அநீதி' :கமல்ஹாசன்

'நீட் எழுத மாணவர்களை அலைக்கழிப்பது அநீதி' :கமல்ஹாசன்

webteam

நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்‌கு வேறு மாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெர‌வித்துள்ளனர். 

தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் பங்கேற்க கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தேர்வு மையத்தை தமிழத்திலேயே அமைக்க வலியுறுத்திய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது, மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் புதிய தேர்வு மையங்களை அமைக்க சிபிஎஸ்சிக்கு உத்தரவிட முடியாது எனவும் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள வெளிமாநில தேர்வு மையங்களில் சென்று தான் தேர்வு எழுத வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கு ஸ்டாலின் உள்ளிட்டோர்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இது குறித்து ட்விட்டரில் குற்றம்சாட்டியுள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்த "டிஜிட்‌டல் இணையதள யுகத்தில் ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி என்றும், இங்கிருந்தே எழுத அரசு ஆவணம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.