டிரெண்டிங்

“இந்த ஆண்டை மறந்து விடுங்கள்.. மீண்டு வருவோம்” - கே.எல்.ராகுல்

“இந்த ஆண்டை மறந்து விடுங்கள்.. மீண்டு வருவோம்” - கே.எல்.ராகுல்

webteam

தவறை ஒப்புக்கொள்ள வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.

பின்னர் பேசிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் “நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. 180 லிருந்து 190 ரன்களை டார்கட் வைத்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக அழுத்தத்தினால் எங்களால் பெரிய இலக்கை வைக்க முடியவில்லை. ஏமாற்றம்தான். ஆனால் ஐபிஎல் அப்படிதான் செல்கிறது.

முதல் பாதியில் முடிவுகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் இன்னும் நன்றாக விளையாட வேண்டும் என அணி உணர்ந்துள்ளது. பந்துவீச்சில் சில இடங்களில் திணறினோம். அதேபோல் பேட்டிங்கிலும் முதல் பாதியில் சரியாக அமையவில்லை. இரண்டாவது பாதியில் நன்றாக விளையாடினோம். முதல் நான்கு இடங்களுக்குள் வருவதற்கான வாய்ப்பை நாங்கள் எங்களுக்கு வழங்கியதில் பெருமிதம் கொள்கிறோம். துரதிர்ஷ்டவசமாக இன்றும் முந்தைய ஆட்டமும் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. ஆனால் அணியை நினைத்து பெருமை படுகிறேன். அடுத்த ஆண்டு வலுவாக திரும்பி வருவோம் என்று நம்புகிறேன். இந்த ஆண்டை மறந்து விடுங்கள்.

நிறைய போட்டிகள் எங்கள் கைக்குள் இருந்தன. ஆனால் நாங்கள் தவறவிட்டுவிட்டோம். அதற்கு எங்களைதான் நாங்கள் குறை சொல்ல வேண்டும். நாம் அனைவருமே தவறு செய்கிறோம். அதேபோல் இந்த சீசனிலும் செய்துள்ளோம். தவறை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மீண்டும் வலுவாக திரும்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.