டிரெண்டிங்

அம்பேத்கர் சிலைக்கு மாலை: மேனகா V/S சோலங்கி சர்ச்சை

அம்பேத்கர் சிலைக்கு மாலை: மேனகா V/S சோலங்கி சர்ச்சை

webteam

மத்திய அமைச்சர் மேனகா காந்தி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து சென்ற பிறகு தலித் அமைப்பினர் அந்தச் சிலையை கழுவினர்.

அம்பேத்கரின் 127வது பிறந்த தினத்தையொட்டி, குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மத்திய குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தச் சென்றிருந்தார். அவருடன் பாஜக எம்பி ராஞ்சன்பென் பாத், மேயர் பாரத் தங்கார், பாஜக எம்எல்ஏ யோகேஷ் படேல் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர். அவர்கள் வருவதைக் கண்ட தலித் அமைப்பினரின் தலைவர் சோலங்கி, பாஜகவினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். அவருடன் வந்திருந்த நூற்றுக்கணக்கானோரும் முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து அங்கு குவிந்திருந்த போலீஸார், சோலங்கி உள்ளிடோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே பாதுகாப்புடன் மேனகா காந்தி உள்ளிட்டோர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திவிட்டுச் சென்றனர். பின்னர் சிலைக்கு அருகே வந்த சோலங்கி உள்ளிட்டோர், சிலையை பாலாலும், நீராலும் கழுவினர். அம்பேத்கரின் சிலை இருக்கும் இடத்தை பாஜகவினர் அசுத்தப்படுத்தியதால், தாங்கள் சுத்தம் செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.