டிரெண்டிங்

"மீண்டும் பாஜக வெற்றி பெற்றால் பொது சிவில் சட்டம்" - உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங்

"மீண்டும் பாஜக வெற்றி பெற்றால் பொது சிவில் சட்டம்" - உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங்

Veeramani

உத்தராகண்ட்டில் பாரதிய ஜனதா மீண்டும் வெற்றி பெற்றால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்

டேராடூனில் பரப்புரையின்போது பேசிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்டம் என்பது அனைத்து தரப்பு மக்களையும் ஒரே பார்வையுடன் அணுகும் என தெரிவித்தார். பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து ஆராய குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

திருமணம், விவாகரத்து, நில உரிமை, சொத்துரிமை உள்ளிட்ட அம்சங்களில் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சட்டதிட்டங்கள் பொது சிவில் சட்டத்தில் இடம் பெறும் எனவும் அவர் கூறினார். சட்ட நிபுணர்கள், அனைத்து தரப்பு பிரதிநிதிகள் கொண்டதாக இக்குழு இருக்கும் என முதலமைச்சர் தெரிவித்தார். தேசிய அளவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாஜக அரசு முயற்சிப்பதாக ஏற்கனவே தகவல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது