நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி திமுக சார்பில் இன்று நடக்கவிருந்த மனிதச் சங்கிலி போராட்டம், சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சேலத்தில் கட்சராயன் ஏரியை பார்வையிடச் சென்ற மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து மூன்று மாவட்டங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அவர்களும் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டப்படி திமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி இந்த மனிதச் சங்கிலி நடைபெற்றது.