டிரெண்டிங்

ஜிஎஸ்டி அமலாக்கத்தை ஒத்திவைக்க வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை

ஜிஎஸ்டி அமலாக்கத்தை ஒத்திவைக்க வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை

webteam

ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி சட்டத்தால் பாதிக்கப்படுவோம் என்ற அச்சம் மக்களுக்கும் வணிகர்களுக்கும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த அச்ச உணர்வை போக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளதாகவும் இதற்காக சம்மந்தப்பட்ட தரப்பினரை அழைத்து பேசுவதுடன், யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில் ஜிஎஸ்டி வரியை அமலாக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் தேக்க நிலையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், ஜிஎஸ்டி முறையை அவசரமாக அறிமுகப்படுத்துவது சரிதானா என மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.