டிரெண்டிங்

உத்தரப்பிரதேசத்தை 'உத்தம' பிரதேசமாக்குவதே குறிக்கோள் - பிரதமர் மோடி வாக்குறுதி

உத்தரப்பிரதேசத்தை 'உத்தம' பிரதேசமாக்குவதே குறிக்கோள் - பிரதமர் மோடி வாக்குறுதி

Veeramani

உத்தரப் பிரதேசத்தை உத்தம பிரதேசமாக உருவாக்குவதே பாரதிய ஜனதாவின் குறிக்கோள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை சூடு பிடித்திருக்கும் நிலையில், பாரதிய ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி சீதாபூர் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தது முதல் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். வன்முறையில் ஈடுபடுவோர், கட்டப் பஞ்சாயத்து செய்வோர், குண்டர்கள், மாஃபியாக்கள் ஒடுக்கப்பட்டிருப்பதாக பேசினார். உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சுதந்திரமாக பண்டிகைகளை கொண்டாட முடியும், பெண்களை கேலி கிண்டல் செய்வோர் ஒடுக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தை உத்தம பிரதேசமாக உருவாக்குவதே பாரதிய ஜனதா ஆட்சியின் குறிக்கோள் என்றும் பிரதமர் கூறினார். உத்தரப் பிரதேசத்தில் இரு கட்டத் தேர்தல்கள் முடிந்த நிலையில், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 7 கட்டங்களுக்கும் வாக்குப்பதிவு முடிந்ததும் மார்ச் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.