டிரெண்டிங்

மாதவிடாய் காலங்களில் எடைக் கூடுகிறதா? காரணங்களும் தீர்வுகளும்!!

மாதவிடாய் காலங்களில் எடைக் கூடுகிறதா? காரணங்களும் தீர்வுகளும்!!

Sinekadhara

சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அளவுக்கதிகமான சோர்வும், உடல் வலியும், அசதியும் ஏற்படும். சிலருக்கு சாதாரண நாட்களைவிட எடைக் கூடியிருப்பதைப் போன்ற உணர்வு இருக்கும். சிலருக்கு எடை கூடும். அதிகபட்சமாக 3 கிலோ வரை எடை கூடியிருக்கும். இதற்குக் காரணம் உடலில் உள்ள புரோஜெஸ்ட்ரான் மற்றும் ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்கள்தான். இது உடலளவில் மட்டுமில்லாமல் மனதளவிலும் மாற்றங்களை உருவாக்கும். 

ஹார்மோன் மாற்றங்கள்

ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதால் குறிப்பாக குறைவதால், உடலில் நீரின் அளவு குறையும். இதனால் எடை கூடும். உடலில் நீர்ச்சத்துப் பற்றாக்குறை ஏற்படுவதால் தசைகள் இறுகி, மார்பகங்களில் வீக்கம் மற்றும் வயிற்றுப்பகுதி பெரிதானது போன்ற உணர்வு ஏற்படும். 

பெரும்பாலான பெண்கள் இதனால் மிகவும் சோர்வடைந்து காணப்படுவர். சிலருக்கு திடீரெனக் கூடிய எடைக் குறையும். சிலருக்கு குறையாமல் அப்படியே இருக்கும்.

வீக்கம்

வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகளில் பிடிப்பு மற்றும் இறுக்கம் இருப்பதால் உடைகள் இறுக்கமாகவும், பிடிப்பதுப் போன்றும் தோன்றும். இது உடல் எடைக் கூடவில்லை என்றாலும், கூடியது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

பசி

மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பு புரோஜெஸ்ட்ரான் அளவு அதிகரிப்பதால் அதிகமாக சாப்பிடத் தோன்றும். அதிகப் பசி எடுக்கும். மேலும் செரட்டோனின் என்ற நொதியின் அளவுக் குறைவதால் சர்க்கரைப் பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்ளத் தூண்டும். இதனால் அளவுக்கதிகமான கலோரிகள் உடலில் சேர்ந்து உடல் எடை கூடும்.

மக்னீசியம் குறைபாடு

மாதவிடாய் காலத்தில் உடலில் மக்னீசியம் குறைபாடு ஏற்படுவதால் உடல் எடை அதிகரிக்கும். மக்னீசியம் அதிகமாக சாப்பிடும் உணர்வைக் கட்டுப்படுத்தும். இது குறையும்போது அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிடுவர். மக்னீசியம் குறைவதால் உடலில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது.

கோபம்

உடல் வசதியற்ற நிலையை உணருவதால் மனநிலையில் மாற்றம் ஏற்படும். சிறிய விஷயங்களுக்குக்கூட அளவுக்கு அதிகமாக கோபம் வரும். சிலருக்கு ஒருவித மனச்சோர்வு, பதட்டம் இருக்கும். 

தீர்வுகள்

தண்ணீர் குடிக்கத் தோன்றாவிட்டாலும் தேவையானத் தண்ணீர் குடிக்கவேண்டும்.

அதிக உப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய்ப் பொருட்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. கூடுமானவரை வீட்டிலேயே சமைத்து உண்டால் எடைக் கூடுவதைத் தவிர்க்கலாம்.

மேலும் பசியைத் தவிர்க்க, உலர் பழங்கள், கொட்டைகளை எடுத்துக்கொள்ளலாம்.

ஒமேகா 3 அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் மக்னீசியம் அளவு அதிகரிக்கும். 

பாதிப்பு அதிகமாக இருந்தால் கால்சியம், விட்டமின் பி, சி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.