டிரெண்டிங்

கொடைக்கானலில் அருங்கானல் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி...

கொடைக்கானலில் அருங்கானல் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி...

kaleelrahman

கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் குடிமராமத்து செய்து தயார்படுத்தி இருந்த அருங்கானல் ஏரி முழுவதும் நிரம்பி மறுகால் பாய்ந்தது.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூண்டியில், பாசன வசதிக்காக வனப்பகுதியை ஒட்டியுள்ள 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது அருங்கானல் ஏரி. இந்த ஏரியை கடந்த ஆண்டு குடிமராமத்து பணி மூலமாக ஆழப்படுத்தி இந்த ஆண்டின் பருவமழையின்போது அதிகஅளவில் சேமித்துவைக்க தயார் படுத்தப்பட்டது.


கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் இந்த ஆண்டு கோடைமழை சரிவர பெய்யாததால், ஏரியின் நீர்மட்டம் உயராமல் இருந்தது. ஆனால் தற்போது மேல்மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால், ஏரி முழுவதும் நிரம்பி மறுகால் பாய்ந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள பூண்டி கிராம மக்கள் விவசாயம் செய்ய தயாராகி வருகின்றனர்.