டிரெண்டிங்

தேர்தல் முடிவுக்கு முன்பே முந்திக் கொண்ட ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் !

தேர்தல் முடிவுக்கு முன்பே முந்திக் கொண்ட ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் !

webteam

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதில் வாக்கு எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கர்நாடகாவில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற கர்நாடக தேர்தலின் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில்
பல திருப்பங்களுக்கு இடையே, அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்னரே ஈபிஎஸும், ஓபிஎஸும் பிரதமருக்கு வாழ்த்து
தெரிவித்தனர். அதிலும் ஓபிஎஸ் ஒருபடி மேலே சென்று ‘தென்னகத்தில் பாஜகவின் பிரம்மாண்டமான நுழைவுக்கு
வாழ்த்துகள்’ என அமித் ஷாவை வாழ்த்தினார். மோடிக்கு எழுதிய கடிதத்தை ஓபிஎஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பின்னர்
பதிவிட்டார். இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் சமூக வலைத்தளங்களில் கலாய்க்க தொடங்கினர். முன்னதாக கடந்த
பிப்ரவரி மாதத்தில் ஓபிஎஸ், தேசியக் கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதை
தொடர்ந்து அதிமுக அமைச்சர்களும் தமிழகத்தில் காவிக்கு இடமில்லை என கூறியிருந்தனர்.  

மேலும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கர்நாடகாவில் யார் ஆட்சியமைத்தாலும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவேண்டும்; இதுவே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும் என கூறினார். இதற்கிடையே,
ஓபிஎஸின் கடித்தத்தை மாநில தகவல் ஆணையம் ஊடகத்தில் வெளியிட வேண்டாம் என முடிவு செய்தது. இருப்பினும்
ஈபிஎஸின் அதிகாரப்பூர்வ அறிக்கை ஊடகத்தில் வெளியானது. பின்னர் அது ஓபிஎஸின் தனிப்பட்ட கருத்து என அதிமுக
தலைவர்கள் சிலர் கூறினர். இதில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் ஒன்றும் சளைத்தவர் அல்ல. அவரும் முழு
முடிவுகள் வெளியாவதற்கு முன்பு ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்தார். 

கர்நாடக தேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதனிடையே இரட்டை மின்விளக்கு சின்னத்தில் அதிமுக போட்டியிட்டது. அதிமுக சார்பில் காந்தி நகர் தொகுதியில் யுவராஜும், ஹனூர் தொகுதியில் விஷ்ணுகுமாரும், கோலார் தங்கவயல் தொகுதியில் அன்புவும் போட்டியிட்டனர். இதில் 3
வேட்பாளர்களுமே டெபாசிட்டை இழந்தனர்.