டிரெண்டிங்

"சரியான வசூலாளிதான்.." - ட்ரக் லாரியிலிருந்து சுங்க வரியாக கரும்பை வசூலித்த யானை!

"சரியான வசூலாளிதான்.." - ட்ரக் லாரியிலிருந்து சுங்க வரியாக கரும்பை வசூலித்த யானை!

JananiGovindhan

யானைகளின் குறும்புத்தனங்கள் குறித்த பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நித்தமும் வெளியாகி வருகிறது. அதன்படி, கரும்பு ஏற்றிச் செல்லும் ட்ரக் வாகனங்களை மறித்து நின்று சில கரும்பு குறுத்துகளை லாவகமாக எடுத்து விழுங்கும் வீடியோதான் தற்போது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

நெடுஞ்சாலையின் காட்டு வழி பாதையில் நின்றுக் கொண்டிருந்த யானை ஒன்று அவ்வழியே வரும் ட்ரக் வாகனங்களை மடக்கி அதில் இருக்கும் கரும்புகளை எடுத்து சாப்பிடும் வீடியோவை Dr Ajayita என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “சுங்க வரி வசூலிப்பவர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் சாலை ஓரமாக நின்றுக் கொண்டிருந்த அந்த யானை, கரும்பு ஏற்றி வந்த லாரியை பார்த்ததும் அதனை மடக்கி, அதில் இருந்த கரும்புகளை எடுத்து அசைப் போட்டுக் கொண்டிருக்க, அதே வழியில் வந்த மற்றொரு ட்ரக் லாரியும் கரும்புகளை கொடுக்கும் விதமாக யானையின் பக்கம் சென்று நிற்கிறது. இப்படியாக வரிசையாக கரும்பு ஏற்றி வந்த வாகனத்தில் இருந்து கரும்புகளை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது அந்த யானை.

இந்த நிகழ்வு தாய்லாந்தில் நடந்ததாக இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா, இதே யானை கரும்பு சாப்பிடும் வீடியோவின் மற்றொரு வடிவத்தை பகிர்ந்து குறிப்பிட்டிருக்கிறார். லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டிருக்கும் இந்த வீடியோக்களில் நெட்டிசன்கள் பலரும் “கரும்பு சுங்க வரி கொடுப்பது ரொம்பவே முக்கியமானது” , “சுங்கவரி பொறுப்பாளர்” என்றெல்லாம் பதிவிட்டிருக்கிறார்கள்.