டிரெண்டிங்

பிரதமரை சந்தித்தும் காவிரி குறித்து பேசாத தம்பிதுரை

பிரதமரை சந்தித்தும் காவிரி குறித்து பேசாத தம்பிதுரை

webteam

மக்களவை துணை சபாநாயகரும் , அதிமுக எம்பியுமான தம்பிதுரை இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது வடகிழக்கு மாநிலங்களில் பாஜக பெற்ற வெற்றிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பிரதமரும் அவருக்கு நன்றி தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது. முதலமைச்சரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் , காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் பிரதமர் அனைத்துக்கட்சி குழுவை சந்திக்காவிடில் , சட்டமன்றத்தை கூட்டி, சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், அனைத்து எம்பிக்களும் ராஜினாமா செய்யலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.

இந்நிலையில் அதிமுக எம்பி மைத்ரேயனும் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றால் முதல் ஆளாக ராஜினாமா செய்யத் தயார் என்றும் தெரிவித்திருந்தார். அதிமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் விவாதத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர். இதுபோன்ற சமயத்தில் தான் தம்பிதுரை பிரதமர் மோடியை சந்தித்தார். ஆனால் தனது சந்திப்பில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எதையும் பேசாமல், வடகிழக்கு மாநில தேர்தல் வெற்றிக்கு மட்டும் வாழ்த்தை தெரிவித்து விட்டு வந்திருக்கிறார்.