டிரெண்டிங்

திமுகவின் மாதிரி சட்டமன்றம் கூட்டம்

திமுகவின் மாதிரி சட்டமன்றம் கூட்டம்

webteam

ஸ்டெர்லைட் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களுக்காக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் மாதிரி சட்டமன்றம் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடத்தினர்.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று மாதிரி சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தினர். திமுக கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை ஏற்படுத்திக்கொண்டு சட்டப்பேரவையில் நிகழும் அலுவல்களை நிகழ்த்தினர். மாதிரி சட்டப்பேரவை கூட்ட சபாநாயகராக சக்கரபாணி தேர்வு செய்யப்பட்டு சட்டப்பேரவை நிகழ்வுகளை நடத்தினார். இதில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து திமுக உறுப்பினர்கள் விவாதித்தனர். மேலும் மாதிரி சட்டமன்றம் கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழ்ந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே போன்ற ஒரு மாதிரி சட்டப்பேரவைக் கூட்டத்தை திமுகவினர் நடத்தினர். தற்போது தூத்துக்குடி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்துள்ள நிலையில் மாதிரி பேரவைத் தொடரை திமுகவினர் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதிரி சட்டமன்றம் நடைபெறும் கலைஞர் அரங்கில் மையப்பகுதியில் இருந்து இருபுறங்களிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாதிரி சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிகத்தினார்.  எதிர்க்கட்சியால் மாதிரி சட்டமன்றம் நடத்தும் நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.