டிரெண்டிங்

ஓபிஎஸ்-சை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: திமுக மனு

ஓபிஎஸ்-சை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: திமுக மனு

webteam

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக, சசிகலா தரப்பு மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு என 2 அணிகளாக பிளவுபட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 18ஆம் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அமளியில் ஈடுபட்ட காரணத்தால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளியேற்றப்பட்டனர். பன்னீர்செல்வம் அணி மட்டும் பேரவைக்குள் இருக்க, வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 122 வாக்குகளுடன் முதலமைச்சர் பழனிசாமி வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக, பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். 

இதுதொடர்பாக, திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதலமைச்சருக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்களையும் கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை புதன் கிழமை நடைபெறும் என தெரியவந்துள்ளது.