டிரெண்டிங்

“தேர்தல் புகார்கள் மீது நேர்மையாக நடவடிக்கை எடுங்கள்” - டிஜிபி அறிவுரை

“தேர்தல் புகார்கள் மீது நேர்மையாக நடவடிக்கை எடுங்கள்” - டிஜிபி அறிவுரை

webteam

தேர்தல் தொடர்பான புகார்கள் மீது நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என‌ தமிழக காவல் துறை அதிகாரிகளுக்கு, தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா அறிவுரை வழங்கியு‌ள்ளார்.

தமிழகத்தில் காவல் துறையின் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக, அசுதோஷ் சுக்லாவை டிஜிபியாக தேர்தல் ஆணையம் நியமித்தது. இதையடுத்து காவ‌ல் துறை அதிகாரிக‌ளுடன் அவர் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் தொடர்பான புகார்கள் மீது துரிதமாகவும், நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் நட‌வடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். 

மேலும், ‌தேர்தல் தொடர்பான அனைத்து சம்பவங்கள் குறித்தும் தேர்தல் காவல் இயக்குநருக்கு அவ்வப்போது தெரியப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்டக் காவல் க‌ண்காணிப்பாளர்களையும் அவர் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து சென்னை மாநகர தேர்தல் பாதுகாப்பு குறித்து, ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுடன், அசுதோஷ் சுக்லா ஆலோ‌சனை நடத்தினார்.