பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத், சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. அங்கு நாளை மறுநாள் முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
நாடே உற்று நோக்கப்படும் குஜராத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், இன்று மாலை 6 மணியுடன் முதல் கட்ட பரப்புரை ஓய்ந்தது. பொது இடங்களில் வைக்கப்பட்ட கட்சி சின்னங்கள், கொடிகள் அகற்றி வருகின்றனர். இத்தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 3 இளம் தலைவர்களான ஜிக்னேஷ் மேவானி, ஹர்திக் படேல், அல்பேஷ் தாகூர் ஆகியவர்களின் எழுச்சி தேர்தலில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.