டிரெண்டிங்

சாராயத்திற்காக ஆற்றை நீந்தும் மது குடிப்பவர்கள் - கடலூர் விபரீதம்..!

சாராயத்திற்காக ஆற்றை நீந்தும் மது குடிப்பவர்கள் - கடலூர் விபரீதம்..!

webteam

கடலூரில் மது குடிப்பவர்கள் அரை கி.மீட்டர் தூரம் நீந்திச் சென்று சாராயம் வாங்குவதால் உயிரிழப்புகள் நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 143 மதுபானக் கடைகள் உள்ளன. இங்கு பொது முடக்கத்திற்குப் பின்னர் நாள்தோறும் ரூ.7 கோடிக்கு மதுவிற்பனையானது. இந்நிலையில் மதுபானங்களின் விலையேற்றத்தால் மது குடிப்பவர்கள் சாராயத்தைக் குடிக்க ஆரம்பித்துள்ளனர். கடலூரில் ஓடும் தென்பெண்ணை ஆறு மறுபுறம் புதுவையில் முடிகிறது.

இந்த ஆற்றுக்கு மறுபுறம் வரை சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நீந்திச் செல்லும் மது குடிப்பவர்கள், அங்குச் சாராயத்தைக் குறைந்த விலைக்கு வாங்கிக் குடிக்கின்றனர். பின்னர் போதையுடன் அங்கிருந்து திரும்ப நீந்தி வருகின்றனர். இவ்வாறு மது குடிப்பவர்கள் செய்வதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மது குடிப்பவர்களின் இந்த விபரீத செயலை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் ஆற்றின் ஒரே இடத்தில் கரையைக் கடக்காமல் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மது குடிப்பவர்கள் நீந்திச் செல்வதால் காவல்துறைக்குக் கண்காணிப்பு பணியில் சவால் ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்தியில் இவர்களைக் கண்காணிப்பது பெரும் இன்னலாக உள்ளது என காவல்துறையினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.