அசாமின் தேநீரை அவமதிக்கும் ‘டூல்கிட்டை’ காங்கிரஸ் பரப்புவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
அசாம் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாநிலத்தின் மிகப் பழமையான தொழில்துறையான தேயிலை உற்பத்தி துறையின் புகழ் மற்றும் பெருமையுடன் விளையாடுவதாக குற்றம் சாட்டினார்.
காங்கிரஸின் "சதித்திட்டத்தின்" ஒரு பகுதியாக உலகெங்கிலும் பிரபலமான அஸ்ஸாம் தேயிலை மற்றும் நமது பண்டைய புனித பாரம்பரியமான யோகாவை அவதூறு செய்ய ஒரு ”டூல்கிட்” கருவித்தொகுதி சமீபத்தில் முயன்றது என்றார். "அசாம் தேயிலைக்கு எதிராக ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது. நீங்கள் ஒரு கருவித்தொகுப்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்க வேண்டும். இது அசாமின் தேயிலைத் தோட்டங்களை அழிக்க முயன்றது. எந்த இந்தியரும் அதை அனுமதிக்க மாட்டார்" என்று அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி, சுவீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கின் சர்ச்சைக்குரிய கருவித்தொகுப்பைக் குறிப்பிடுகிறார். துன்பெர்க் ட்வீட் செய்து பின்னர் நீக்கினார்,