டிரெண்டிங்

நஷ்டத்தில் இயங்கிய அமித்ஷா மகன் நிறுவனத்திற்கு பல கோடி வருமானம் எப்படி?: காங். கேள்வி

நஷ்டத்தில் இயங்கிய அமித்ஷா மகன் நிறுவனத்திற்கு பல கோடி வருமானம் எப்படி?: காங். கேள்வி

rajakannan

பாஜக ஆட்சியில் அமித்ஷா மகன் நிறுவனம் பன்மடங்கு வருமானம் ஈட்டியுள்ளது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பாஜக தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா. ஜெய் ஷாவிற்கு சொந்தமான டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் ரூ.80.5 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, நரேந்திர மோடி பிரதமராகவும், அமித்ஷா பாஜக தலைவராகவும் பொறுப்பேற்ற பிறகே ஜெய் ஷா நிறுவனத்தில் வருமானம் 16 ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் இது குறித்து பிரதமர் மற்றும் அமித்ஷா பதிலளிக்க வேண்டும் என்றும், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய கபில் சிபில், “2013 மற்றும் 2014 ஆம் வருடங்களில் ஜெய் ஷாவின் டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் நிறுவனம் ரூ.6,230 மற்றும் ரூ.1,724 நஷ்டத்தில் இயங்கி வந்தது. ஆனால், 2014-15 முதல் படிப்படியாக அதிக வருமானம் ஈட்டியுள்ளது. மேலும், எந்த பங்கும், எந்த சரக்கும், எந்த சொத்தும் இல்லாத ஒரு நிறுவனம் ரூ.80 கோடிக்கு எப்படி வருமானம் ஈட்ட முடியும்? இதுமிகவும் ஆச்சர்யமில்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.