டிரெண்டிங்

சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கிய முன்னாள் கவுன்சிலர்

சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கிய முன்னாள் கவுன்சிலர்

kaleelrahman

மதுரவாயல் சுற்றுவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் உட்பட 1000 பேருக்கு முன்னாள் கவுன்சிலர் வீதிவீதியாக சென்று மட்டன் பிரியாணி வினியோகம் செய்தார்.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் என பலர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த திமுக முன்னாள் கவுன்சிலர் ரஜினிகாந்த் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள், சாலையோரம் வசிப்பவர்கள் என 1000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கினார்.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக தினமும் 1000 பேருக்கு உணவு அளித்து வரும் ரஜினிகாந்த் இன்று அசை உணவு வழங்க வேண்டும் என 1000 பேருக்கு மட்டன் பிரியாணி விருந்து படைத்துள்ளார். இதேபோல் தொடர்ந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி மளிகை பொருட்களை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.