டிரெண்டிங்

ஆளுநர்கள் மூலம் தனி அரசு நடத்துவதா?:மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

ஆளுநர்கள் மூலம் தனி அரசு நடத்துவதா?:மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

webteam

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சிதைத்து, ஆளுநர்கள் மூலம் தனி அரசுநடத்தும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், புதுச்சேரி, டெல்லி மற்றும் மேற்கு வங்க மாநில ஆளுநர்களால் மாநில அரசுகள் சந்திக்கும் பிரச்னைகளை பட்டியலிட்டுள்ளார். புதுச்சேரியில் மாநில அரசுடன் ஆலோசிக்காமல் மத்திய அரசும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியும் நியமன உறுப்பினர்களை நியமித்தது அரசியல் சட்ட மாண்பை குழிதோண்டிப் புதைக்கும் செயல். அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடக்க வேண்டிய ஆளுநர், தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுப்பது அரசியல் நாகரிகமல்ல.மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜியை அந்த மாநில ஆளுநர் மிரட்டுகின்ற தொனியில் பேசியதை பொறுத்துக் கொள்ள இயலாது. டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவாலை துணை நிலை ஆளுநர் மூலமாக செயல்பட விடாமல் தடுப்பது ஜனநாயக நாட்டில் யாரும் ஏற்க முடியாதது. எனவே, ராஜ்பவனை வைத்து மாநிலத்தில் தனி அரசு நடத்தும் போக்கை உடனடியாக மத்திய அரசு கைவிட்டு, மத்திய, மாநில உறவுகள் நலிவடையாமல் பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.