டிரெண்டிங்

குஜராத்தில் சதத்தை தவறவிட்ட பாஜக: 99 இடங்களில் வெற்றி

குஜராத்தில் சதத்தை தவறவிட்ட பாஜக: 99 இடங்களில் வெற்றி

rajakannan

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. குஜராத் மாநிலத்தில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்கள் படபடக்கும் திருப்பங்கள் அரங்கேறின. முதலில் பாஜகவும், பின்னர் சில நிமிடங்கள் காங்கிரஸும் முன்னிலை பெற்றது. ஆனால் 10 மணிக்கு மேல் நிலவரம் முற்றிலும் மாறிப்போனது. பாஜக 20-30 இடங்கள் முன்னிலை பெற்று, அதே நிலைதான் தொடர்ந்து நீடித்தது. காங்கிரஸ் 75 இடங்களிலும், பாஜக 100 இடங்களிலும் முன்னிலை பெற்று வந்தன. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சி 70 இடங்களுக்கு கீழே முன்னிலை பெறும் நிலை இருந்தது. பின்னர் காங்கிரஸ் கட்சி 70 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றது.

இறுதியில், மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 77, பாஜக 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும், பாரதிய பழங்குடியினர் கட்சி 2, சுயேட்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். பாஜக 99 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. முந்தையை தேர்தலை விட பாஜக 16 இடங்கள் குறைவாக வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 16 இடங்கள் அதிகமாக வென்றுள்ளது.