டிரெண்டிங்

ஃபேஸ்புக்கில் தேர்தல் விளம்பரம் ! அதிகளவில் செலவு செய்யும் பாஜக

ஃபேஸ்புக்கில் தேர்தல் விளம்பரம் ! அதிகளவில் செலவு செய்யும் பாஜக

webteam

ஃபேஸ்புக்கில் விளம்பரங்களுக்கு பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் அதிக செலவு செய்துள்ளது அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் கட்சிகள் விளம்பரங்களை பதிவிட்டு வருகின்றனர். அதற்காக அதிக செலவும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் தனது ஆட் லைப்ரரி ரிப்போர்ட்( Facebook’s Ad Library Report) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஃபேஸ்புக்கில் 51,810 அரசியல் விளம்பரங்கள் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 10.32 கோடி ரூபாய் செலவில் அரசியல் விளம்பரங்கள் ஃபேஸ்புக்கில் பதிவாகியுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் 2.23கோடி ரூபாய்க்கு 3,700 விளம்பரங்கள் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அதேபோல காங்கிரஸ் கட்சி 5.91 லட்சம் ரூபாய் செலவில் 410 விளம்பரங்கள் பதிவிட்டுள்ளது. மேலும் பிஜூ ஜனதா தளம் விளம்பரங்களுக்கு 8.56 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது. தெலுங்கு தேசம் 1.58 லட்சம் ரூபாயும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 58ஆயிரம் ரூபாயும் விளம்பரங்களுக்கு செலவு செய்துள்ளன.