டிரெண்டிங்

விதிமுறைகளை மீறி செயல்படும் பார்கள்... கண்டுகொள்ளாத காவல்துறையினர்

விதிமுறைகளை மீறி செயல்படும் பார்கள்... கண்டுகொள்ளாத காவல்துறையினர்

kaleelrahman

கொரோனா பரவல் காரணமாக மதுபானக் கடையில் பார் வசதிக்கு அரசு தடை விதித்துள்ளது. அதனை மீறி ஹாயாக பாரில் அமர்ந்து மது குடிக்கும் குடிமகன்கள், காவல்துறையினர் கண்டுகொள்ளாததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

சென்னை பள்ளிகரணை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரேடியல் சாலை, கோவிலம்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு மதுபானக்கடையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி பார் வசதிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் அதனை காற்றில் பறக்கவிட்டு பார் செயல்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பாரில் அமர்ந்து மது குடிக்க தடை விதித்துள்ளது. அதனை மீறி சட்ட விரோதமாக பாரில் அமர்ந்து மது அருந்தும் காட்சிகள் வெளியாகியுள்ளது, இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பாரில் இருக்கும் நபர்களிடம் கேட்ட போது போலீசாரை சரி கட்டி தான் பாரை நடத்தி வருகிறோம், பாரில் போதிய வருமானம் இல்லை ஆனால் மாமூல் கொடுக்கிறோம் என்கின்றனர். அரசின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய பள்ளிகரணை காவல்துறையினர் பார் நடப்பதை கண்டும் காணாமல் இருக்கின்றனர். இதனால் போலீசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் பார் நடத்த அனுமதித்துள்ளனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.