டிரெண்டிங்

பூனைகளை தனியாக அனுப்பியதால் பரிதவித்த உரிமையாளர்: டொரன்டோ ஏர்போர்ட்டில் நடந்த நெகிழ்ச்சி!

பூனைகளை தனியாக அனுப்பியதால் பரிதவித்த உரிமையாளர்: டொரன்டோ ஏர்போர்ட்டில் நடந்த நெகிழ்ச்சி!

JananiGovindhan

விசா பிரச்னையை முன்வைத்து வளர்ப்பு பூனைகளையும், பயணியின் லக்கேஜ்களை மட்டும் சான் பிரான்சிஸ்கோவிற்கு ஏர்லைன் நிர்வாகம் அனுப்பி வைத்திருக்கும் நிகழ்வு கனடா நாட்டில் நடந்திருக்கிறது.

கடந்த ஜூலை 6ம் தேதி, கனடாவைச் சேர்ந்த அப்பாஸ் ஜோய்ப் என்ற நபர் சான் பிரான்சிஸ்கோவிற்கு செல்ல முறப்பட்டார். இதற்காக தன்னுடைய மிமி, புபா என்ற இரண்டு வளர்ப்பு பூனைகளுடன் டொரன்டோ விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.

அங்கு, அப்பாஸின் விசாவில் சிக்கல் இருப்பதால் அவரால் பயணிக்க முடியாது என கனடா ஏர்லைன் நிறுவனம் அனுமதி மறுத்ததோடு, அவரது இரு பூனைகளையும், லக்கேஜ்களையும் சான் பிரான்சிஸ்கோவிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதனால் அப்பாஸ் கடுமையான அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறார்.

சான் பிரான்சிஸ்கோவில் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை வைத்து பூனைகளையும், லக்கேஜையும் பெற்றுக்கொள்ளும்படி கனடா ஏர்லைன்ஸ் அப்பாஸிடம் கூறியிருக்கிறது.

ஆனால், அங்கு எவரையும் எனக்கு தெரியாது, என்னுடைய பூனைகள் ஏதோ குப்பைகளை போல தூக்கி எறியப்பட்டிருப்பது அபத்தமானது என அப்பாஸ் குற்றஞ்சாட்டியதோடு, டொரன்டோ விமான நிலையத்திலேயே இருந்திருக்கிறார்.

ALSO READ: 

இதனையடுத்து, 15 மணிநேரம் காத்திருந்திருப்புக்கு பிறகு தன்னுடைய பூனைகளுடன் அப்பாஸ் இணைந்திருக்கிறார். அப்போது மிமியும், புபாவும் மிகவும் சோர்ந்து உடல்நலிவுற்று காணப்பட்டதாக பிசினஸ் இன்ஸைடரிடம் அப்பாஸ் தெரிவித்திருக்கிறார்.

pet parent ஆக அப்பாஸ் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், ஏர் கனடா நிர்வாகம் செல்லப்பிராணிகளுடன் பயணிக்கும் பயணிகள் தொடர்பான தன்னுடைய கொள்கையை மாற்றியிருப்பதாக தெரிவித்துள்ளது.

ALSO READ: 

அதன்படி, செல்லப்பிராணிகள் பேகேஜ் வழியாக அனுப்பும் விதியை ரத்து செய்து இனிமேல் பயணிகள் தங்களுடைய கைப்பைகளிலோ அல்லது ஏர் கனடாவின் கார்கோ வழியாகவோ எடுத்துச் செல்லும் வகையில் விதியை திருத்தியமைத்திருப்பதாகவும், இது செப்டம்பர் 12ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.