டிரெண்டிங்

வெளியூர் மீனவர்களால் பாதிக்கப்படும் வாழ்வாதாரம்... வேதாரண்யம் மீனவர்கள் போராட்டம்

வெளியூர் மீனவர்களால் பாதிக்கப்படும் வாழ்வாதாரம்... வேதாரண்யம் மீனவர்கள் போராட்டம்

kaleelrahman

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடிக்க தடை விதிக்கக் கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் தங்கி வெளி மாவட்டங்கள் மற்றும் தாலுகாவைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிப்பதால் உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாலும் கொரோனா தொற்று அச்சத்தாலும் வெளியூர் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்க கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மீன்வளத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் கோடியக்கரையில் வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பதை தடை செய்யக் கோரி மீனவர்கள் கொடுத்த புகாரின் பேரில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் நிறைவடைந்தது. 

இதையடுத்து கோடியக்கரையில் தங்கி வெளியூர் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு தடைவிதிக்கும் வரை வேதாரண்யம் தாலுகாவைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை வெள்ளப்பள்ளம் புஷ்பவனம் வானவன் மகாதேவி உள்ளிட்ட 15 கிராமங்களைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 1200 பைபர் படகுகள் கடலுக்குச் கரையில் நிறுத்தப் பட்டுள்ளன.