18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை வருகின்ற 16ம் தேதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க இருக்கிறது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை கூடுதல் அமர்வு விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தனி நீதிபதியிடம் முறையிட்டார்.
இதனை ஏற்று, தனிநீதிபதி பரிந்துரை செய்ததையடுத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அமர்வு 16ம் தேதி விசாரிக்கிறது. இந்த
வழக்குடன் சேர்த்து அவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதை ரத்துசெய்யக் கோரி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு, முதல்வருக்கு எதிராக
வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 12 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு உள்பட 7 வழக்குகள் வருகிற 16ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு
முன்பு விசாரணைக்கு வருகின்றன.