திமுகவின் தேர்தல் அறிக்கையில் கலப்புத் திருமண ஊக்கத்தொகை தொடர்பான வாக்குறுதி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறாக காணொலி வெளியிட்ட பெண்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், காணொலியை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கவும் காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் கலப்புத் திருமணம் செய்தால் உதவித்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திரித்து பெண் ஒருவர் பல்வேறு சமுதாயப் பெண்களுக்கு எதிராக திமுக செயல்படுகிறது என பொருள்படும்படி காணொலியை வெளியிட்டார்.
இது தொடர்பாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பெண்ணின் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.