டிரெண்டிங்

குஜராத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு 68 சதவீதம்

குஜராத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு 68 சதவீதம்

rajakannan

குஜராத் சட்டப்பேரவை முதற்கட்டத் தேர்தலில் 68 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குஜராத் சட்டப்பேரவை முதற்கட்டத் தேர்தலில், 89 தொகுதிகளில் காலை 8 மணி தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கிய உடன் 30-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்கள் அனைத்து 11 மணியளவில் சரி செய்யப்பட்டு அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் உள்ளிட்ட தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 22 ஆண்டு காலமாக ஆட்சிப்பொறுப்பை வகிக்கும் பாரதிய ஜனதா தனது ஆட்சியை தக்க வைக்குமா?, காங்கிரசின் புதிய தலைவராக பதவியேற்க உள்ள ராகுல்காந்தியின் பிரசாரத்திற்கு வெற்றிக்கனியை தருமா என்ற எதிர்பார்ப்புகளை இந்தத்தேர்தல் ஏற்படுத்தி உள்ளது.

மதியம் 12 மணி வரை 30% வாக்குகள் பதிவும், மாலை 4 மணி வரை 47.28 சதவீதம் வாக்குப்பதிவும் ஆனது. இறுதியில் முதற்கட்டத் தேர்தலில் 68 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது 2012-ம் ஆண்டு பதிவான வாக்குகளை விட குறைவு ஆகும். 2012-ல் 71.3 சதவீத வாக்குகள் பதிவானது.

இதனையடுத்து அடுத்தக்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 14-ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதியும் நடைபெறவுள்ளது.