டிரெண்டிங்

குஜராத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 68.7 சதவீதம்

குஜராத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 68.7 சதவீதம்

rajakannan

குஜராத் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 68.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் தங்களது தொகுதிகளில் வாக்குகளை பதிவு செய்தனர். பட்டிதார் அமைப்பு தலைவர் ஹர்திக் படேலும் தனது தொகுதியில் வாக்களித்தார். 

மதியம் 2 மணி வரை 47.40 சதவீதம்,  4 மணி நிலவரப்படி 62.37 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இறுதியில், மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. இரண்டாம் கட்ட தேர்தலில் 68.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட தேர்தலின் போதும் இதேபோல் 68 சதவீதம் வாக்குகளே பதிவாகி இருந்தது. இரண்டு கட்ட வாக்குப்பதிவும் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி பெறவுள்ளது. அன்றே முடிவுகள் தெரியும்.