மைசூர் மாவட்டம் அடகனஹல்லிப் பகுதியில் பள்ளத்தில் விழுந்த யானையை வனத்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் இணைந்து மீட்டக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
மைசூர் மாவட்டம் அடகனஹல்லிப் பகுதியில் சுற்றித்திருந்த 30 வயது நிரம்பிய யானை ஒன்று பள்ளத்தில் விழுந்தது. நீண்ட நேரமாக முயற்சித்தும் அந்த யானையால் பள்ளத்தில் இருந்து எழ முடியவில்லை. யானை பள்ளத்தில் கிடந்து தவிப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறையினர் பள்ளத்தை யானை எழும் வகையில் சீர் படுத்தினர். பள்ளம் சீர் படுத்தப்பட்ட பின்னரும், சோர்வின் காரணமாக யானையால் எழுந்திருக்க முடியவில்லை. அதன் பின்னர் யானை இருக்கும் இடம் முழுவதும் நீர் தெளிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்த ஜேசிபி கொண்டு யானை எழுவதற்கு உதவிக் கொடுக்கப்பட்டது. ஜேசிபி-யின் உதவியைப் பெற்ற யானை எழுந்து கொண்டது. இதில் யானைக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை.
இது தொடர்பான வீடியோவை சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரி ஏழு குணடலு அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் இந்த வீடியோவை பார்த்து நெகிழ்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.