டிரெண்டிங்

20 பல்கலைக்கழகங்களை உலகத் தரத்திற்கு உயர்த்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி: மோடி அறிவிப்பு

20 பல்கலைக்கழகங்களை உலகத் தரத்திற்கு உயர்த்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி: மோடி அறிவிப்பு

webteam

நாடு முழுவதிலுமுள்ள 20 பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்து அவற்றை உலகத் தரத்திற்கு உயர்த்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

பீகார் மாநிலம் பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 10 தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 10 அரசு பல்கலைக்கழகங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு 10 ஆயிரம் கோடி உதவி வழங்க உள்ளதாகவும் அவை உலகத் தரம் வாய்ந்தவையாக மாற வேண்டும் எனவும் கூறினார்.

சர்வதேச அளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முதல் 500 இடங்களில் இந்தியாவில் இருந்து ஒரு பல்கலைக்கழகம் கூட இல்லை எனக் கூறிய மோடி, நமது பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி மையங்களும் உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இடம் பிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க தமது அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். அரசாங்கத்தின் கடுமையான விதிமுறைகள் மற்றும் ஒழுங்கு விதிகளில் இருந்து ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களை விடுவிப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையை தனது அரசு எடுத்துள்ளதாகவும் மோடி கூறினார்.