டிரெண்டிங்

குடியிருப்புக்குள் புகுந்த 10அடி நீள மலைப்பாம்பு... பிடிக்க முயன்ற வீரரை கடித்ததால் அச்சம்

குடியிருப்புக்குள் புகுந்த 10அடி நீள மலைப்பாம்பு... பிடிக்க முயன்ற வீரரை கடித்ததால் அச்சம்

kaleelrahman

துவரங்குறிச்சியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பை பிடிக்க முயன்றபோது தீயணைப்பு வீரரின் கையை கடித்தது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி காவலர் குடியிருப்புக்கு அருகே உள்ள சின்ன செட்டிக்குளத்தெருவில் வசிப்பவர் உமர். இவரது வீட்டின் பின்புறம் இருக்கும் அடர்ந்த புதர் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்புநிலைய அலுவலர் மாதவன் தலைமையிலான துவரங்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை வீரர்கள் கருவிகளை கொண்டு புதரில் இருந்த 10 நீள மலைப்பாம்பை பிடித்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் வீரர் நாகேந்திரன் வலது கையில் மலைப்பாம்பு கடித்துள்ளது. இதில் காயமடைந்த நாகேந்திரன் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையம் திரும்பினார். பிடிபட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பெரியமலை வனப்பகுதியில் விடப்பட்டது.