புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்று முலாயம் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங். இவர் சமாஜ்வாதி கட்சியின் புரவலராகவும் இருந்து வருகிறார். அவரது குடும்பத்தினர் தலையீட்டால் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அவர் லக்னோவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அகிலேஷ் தனது மகன் என்பதால் அவருக்கு தனது ஆசிகள் எப்போதும் உண்டு என்று குறிப்பிட்டார். இருப்பினும், அரசியலில் அவரது முடிவுகளை நான் ஏற்பதில்லை. ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான கசப்புணர்வு வெகு நாட்களுக்கு நீடிக்க முடியாது. இதற்காக நான் தனி கட்சி தொடங்க போவதில்லை. அப்படியொரு எண்ணம் எனக்கில்லை என்றார்.
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் அவர்கள் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது என்று முலாயம் குற்றம் சாட்டினார்.