டெக்

3 இருக்கு..... 5 இருக்கு.... 4 இல்லை... நோக்கியோவின் மர்மம் என்ன?

3 இருக்கு..... 5 இருக்கு.... 4 இல்லை... நோக்கியோவின் மர்மம் என்ன?

webteam

ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் களமிறங்கியுள்ள நோக்கியா நிறுவனம் புதிதாக நோக்கியா 3,5,6 என்ற 3 மொபைல்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த வரிசையில் நோக்கியா 4 மாடல் ஏன் இடம்பெறவில்லை என்ற கேள்வி கேட்ஜெட் பிரியர்களிடம் எழுந்தது. இதுகுறித்து ஹெச்எம்டி நிறுவனத்தின் சீஃப் மார்க்கெட்டிங் ஆஃபீசரான பெக்கா ரண்டாலா விளக்கமளித்துள்ளார். உலகின் முன்னணி மார்க்கெட்டுகள் சிலவற்றில் 4 என்ற எண் அபசகுணமாகக் கருதப்படுவதால், நோக்கியா 4 என்ற மாடலை நாங்கள் அறிமுகப்படுத்தப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் இந்த வரிசையில் மேலும் பல ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உலக அளவில் நோக்கியாவின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்கிறது என்று கூறிய அவர், நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்வையிடுபவர்களில் 30 சதவீதம் பேர் இந்தியர்களே என்றும் கூறினார்.

செல்போன் பிரியர்களின் ஆதர்ஷமான மொபைல் போனாக இருந்த நோக்கியா, பொருளாதார சிக்கல்களால் செல்போன் உற்பத்தியை நிறுத்தியது. கடும் நெருக்கடி ஏற்படவே, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கைக்கு நோக்கியா நிறுவனம் மாறியது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் பிரபலமான நிலையில், மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்துடன் வெளியான நோக்கியா போன்களால் சந்தையில் பழைய இடத்தைப் பிடிக்க முடியவில்லை. நோக்கியாவின் சில மாடல்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வெளியானாலும், அது வாடிக்கையாளர்களைக் கவரவில்லை. இந்த நிலையில், நோக்கியா நிறுவனத்தைக் கைப்பற்றிய ஹெச்எம்டி குளோபல் நிறுவனம், புதிய வடிவமைப்புடன் நோக்கியா ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்தியுள்ளது. தற்போது நோக்கியா 3, 5, 6 ஆகிய பெயர்களில் புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.