டெக்

புதிய களத்தில் கால் பதிக்க வருகிறது வாட்ஸ்அப்

புதிய களத்தில் கால் பதிக்க வருகிறது வாட்ஸ்அப்

Rasus

தகவல் தொடர்பு சேவையில் பிரபலமான வாட்ஸ்அப் நிறுவனம் மின்னணு பணப்பரிமாற்ற சேவையிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.

உலகளவில் இச்சேவையை தர திட்டமிட்டுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து இதை தொடங்கவும் வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. புதிதாக தரப்பட உள்ள சேவைக்கு தலைமைப் பொறுப்பு ஏற்க தகுதியான நபரையும் வாட்ஸ்அப் தேடி வருகிறது. கடந்தாண்டு வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரைன் ஆக்டன், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்த போது மின்னணு பணப்பரிமாற்ற சேவை குறித்து பேசியதாக தெரிகிறது. வாட்ஸ் அப்க்கு உலகளவில் 100 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் 20 கோடி பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.