பிரபல சமூக வலைத் தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் நிறுவனம் அண்மையில் ஜிப் பைல் சேரிங் ஆப்சனை அறிமுகப்படுத்தியது.
பெரிய அளவிலான கோப்புகளை தரம் குறையாமல் சுருக்க பயன்படும் வழிமுறை தான் ஜிப் பைல் பார்மெட். இதன் மூலம் ஒரு வீடியோ அல்லது அனிமேஷன் வகை புகைப்படங்களை டவுன்லோடு செய்யாமலே காணலாம்.
ஒரு நாளில், ஒரே நேரத்தில் குறைந்தது 10 ஜிப் பைல்களைதான் பிறருக்கு அனுப்ப முடியும் என்ற விதிதான் இதுவரை வாட்ஸ்அப்பில் நடைமுறையில் உள்ளது. அந்த விதியை வாட்ஸ்அப் தற்போது தளர்த்தவுள்ளது. வழக்கமான எமோஜிகளுக்கு அருகே இந்த புதிய வசதியும் இருக்கும், குறிப்பிட்ட GIF-களை தேடி பெறும் வசதியும் உள்ளது.
இளைஞர்கள் மத்தியில் ஜிப் பைல் அதிகம் பகிரப்படுவதால், வாட்ஸ்அப்பில் அனுப்பும் ஜிப்பைல்களின் எண்ணிக்கையை 10லிருந்து 30 ஆக உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
பயனர்களுக்கு புதிய வசதிகளை வழங்கும் நோக்கில் வாட்ஸ்அப் அதன் பீட்டா வேர்சனின் பரிசோதனையை செய்து வருகிறது.
சோதனை முயற்சி வெற்றி பெரும் பட்சத்தில் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். (IOS) மொபைல்களில் ஒரு நாளில், ஒரே நேரத்தில் 30 ஜிப் பைல்களை பகிர முடியும்.