டெக்

பருவமழைக்கு தனியாக எமோஜி வெளியிட்ட ட்விட்டர்

பருவமழைக்கு தனியாக எமோஜி வெளியிட்ட ட்விட்டர்

webteam

நாடு முழுவதும் பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதற்கான பிரத்யேக எமோஜி ஒன்றியை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.
ஊதா நிறத்திலான குடை போன்ற அந்த எமோஜி, மழை தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை மக்கள் எளிதில் கண்டுகொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. #Monsoon2017, #Monsoon, #IndiaRains, #Baarish, #MumbaiRains, #DelhiRains, #BengaluruRains #HyderabadRains, #ChennaiRains and #AhmedabadRains போன்ற ஹேஷ்டேக்குகளை நெட்டிசன்கள் பயன்படுத்தும் போது அந்த எமோஜி தானாகவே தோன்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எமோஜி வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரத்யேக எமோஜியை வெளியிட்டுள்ள ட்விட்டர், வானிலை தொடர்பாக இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முதல் எமோஜி இதுவாகும்.