டெக்

குறையுது வாய்ஸ் கால் கட்டணம் - டிராய்

குறையுது வாய்ஸ் கால் கட்டணம் - டிராய்

webteam

தொலைதொடர்பு நிறுவனங்கள் சொந்த லாபத்திற்காக இண்டர்நெட் கட்டணம் மற்றும் வாய்ஸ் கால் கட்டணம் அதிகம் வசூல் செய்கின்றன., இப்போது மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புதிய திட்டத்தை கொண்டுவர உள்ளது. அதன்படி விரைவில் வாய்ஸ் கால் கட்டணங்கள் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இண்டர்கனெக்ட் சேவை கட்டணங்கள் சற்று அதிகமாக உள்ளது. எனவே, தொலைதொடர்பு நிறுவனங்களின் இண்டர்கனெக்ட் சேவை கட்டணங்களை குறைக்க டிராய் அமைப்பு திட்டமிட்டுள்ளது 
இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் கட்டணங்கள் வெகுவாக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இண்டர்கனெக்ட் கட்டணங்கள் குறைவதால் வாய்ஸ் கால் கட்டணங்களும் குறையும். அதன்படி 14 பைசாவில் இருந்து10 பைசாவாக குறையும் என டிராய் அமைப்பு கூறியுள்ளது. டிராய் அமைப்பு பல்வேறு கட்டணத் திட்டங்களை கொண்டுவரும் எனத் தெரிவித்துள்ளது, அதன்படி இப்போது வாய்ஸ் கால் திட்டத்தை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.