டெக்

3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தினால் துடித்துடிக்கும் இதயம் (வீடியோ)

3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தினால் துடித்துடிக்கும் இதயம் (வீடியோ)

webteam

கணினியின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் 3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி செயற்கையாக இயங்ககூடிய இதயம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 26 மில்லியன் பேர் இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் சுமார் 3000 மக்கள்
இதய மாற்று சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்கு
தேவையான மாற்று இதயத்தினை பெறுவதில் பெரும் சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவ துறையில்
பெரும் புரட்சி செய்துள்ளது இந்த செயற்கை இதயம்.

சுவிட்ஸர்லாந்தின் ETH ஜூரிச் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு மென்மையான சிலிக்கானால் ஆன செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளனர்.
இது உண்மையான மனித இதயம் போல தோற்றமளிக்கிறது. நிஜத்தைப் போன்று செயல்படக்கூடிய இந்த இதயத்தினைக் கொண்டு எளிதாக இதய மாற்று
அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

3டி பிரிண்ட் இதயமானது 390 கிராம் (0.85 எல்பி) எடை,  679 செ.மீ நீளம் கொண்டது. இயற்கை இதயத்தைப் போலவே, அது வலது மற்றும் இடது வென்ட்ரிக்லைக்
கொண்டிருக்கிறது. செயற்கை இதயத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், 3டி பிரிண்ட் இதயத்தின் மூலம் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய சாத்தியம்
உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.